தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்திக்கடவு-அவிநாசி 2வது திட்டம்: செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

 அத்திக்கடவு-அவிநாசி 2வது திட்டம்: செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

 அத்திக்கடவு-அவிநாசி 2வது திட்டம்: செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 26, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க கோரி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகள் நீராதாரம் பெறும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 1045 குளம், குட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

''மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து விடுபட்டுள்ள 1400 குளம், குட்டைகளை, அத்திக்கடவு - அவிநாசி 2வது திட்டம் மூலம் இணைக்க வேண்டும்; இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து பணிகளை துவங்க வேண்டும்'' என அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினர். ஊத்துக்குளியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகளும் பங்கேற்றனர். வரும் 28ம் தேதி நம்பியூர் மற்றும் புளியம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us