/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு நீர் வராமல் வறண்ட தடுப்பணை
/
அத்திக்கடவு நீர் வராமல் வறண்ட தடுப்பணை
ADDED : ஜூன் 29, 2025 11:54 PM
கோவில்பாளையம்; வையம்பாளையம் தடுப்பணைக்கு பல மாதங்களாக அத்திக்கடவு நீர் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
கோவில்பாளையம் அருகே ஏழு ஏக்கர் பரப்பளவில் வையம்பாளையம் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில், வையம்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு குழு மற்றும் கவுசிகா நீர்க் கரங்கள் சார்பில், ஒவ்வொரு வாரமும், சீரமைப்பு பணி நடைபெறுகிறது. மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பணைக்கு மழை நீர் வரும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'இந்த தடுப்பணை அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு ஓ.எம்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. குழாய் பதிக்கப்பட்டுள்ளது. எனினும் பல மாதங்களாக அத்திக்கடவு நீர் வரவில்லை.
இதனால் தடுப்பணையின் பல பகுதிகள் வறண்டு போய் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக குளத்தில் சீரமைப்பு பணி செய்து தண்ணீருக்காக காத்திருக்கிறோம். அதிகாரிகள் இந்த தடுப்பணையில் அத்திக்கடவு நீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.