/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு கூட்டமைப்பு விழா; கண்காட்சி நடத்த முடிவு
/
அத்திக்கடவு கூட்டமைப்பு விழா; கண்காட்சி நடத்த முடிவு
அத்திக்கடவு கூட்டமைப்பு விழா; கண்காட்சி நடத்த முடிவு
அத்திக்கடவு கூட்டமைப்பு விழா; கண்காட்சி நடத்த முடிவு
ADDED : ஜன 28, 2025 11:28 PM

அன்னுார்; முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நடத்தப்படும்பாராட்டு விழாவில், 60 ஆண்டு கால போராட்ட நிகழ்வுகளை, கண்காட்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றிய, முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில், வருகிற 9ம் தேதி பாராட்டு விழா அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் அன்னூரில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். நிர்வாகி கணேசன் பேசுகையில், ''1965ம் ஆண்டு முதல் 60 ஆண்டு காலம் இந்தத் திட்டத்திற்காக நடைபயணம், கடையடைப்பு, காலவரையற்ற உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்ட நிகழ்வுகள் அடங்கிய கண்காட்சி, பாராட்டு விழா அரங்கில், 9ம் தேதி காலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
பாராட்டு விழாவன்று மதியம் கம்பத்தாட்டம், வள்ளி கும்மியாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்னுார், அவிநாசி, நம்பியூர், சூலுார் வடக்கு, கோபி ஆகிய பகுதிகளில் பாராட்டு விழா குறித்து, வாகனப் பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், காளிச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரன் ஆகியோர் அத்திக்கடவு திட்டத்திற்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசினர்.

