/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு குறுமைய தடகள போட்டியில் சீறிப்பாய்ந்த வீரர், வீராங்கனைகள்
/
தெற்கு குறுமைய தடகள போட்டியில் சீறிப்பாய்ந்த வீரர், வீராங்கனைகள்
தெற்கு குறுமைய தடகள போட்டியில் சீறிப்பாய்ந்த வீரர், வீராங்கனைகள்
தெற்கு குறுமைய தடகள போட்டியில் சீறிப்பாய்ந்த வீரர், வீராங்கனைகள்
ADDED : ஆக 13, 2025 09:10 PM

கோவை; குனியமுத்துார், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா(எஸ்.ஆர்.வி.,) மெட்ரிக் பள்ளியானது தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கிய தடகள போட்டியில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.எஸ்.ஆர்.வி., பள்ளி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா ஆகியோர் உடனிருந்தனர். இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 800 மீ., ஓட்டத்தில் ஸ்ரீவரதன், வினோத், ராஷித் அஜில் ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் அவிநவ் பாபு, வினோத், ராஷித் அஜில் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல், 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 400 மீ., ஓட்டத்தில் பிஷ்மியா, காவியா, ரம்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான வட்டு எறிதல் போட்டியில் சஞ்சனா, சகானா, தீபிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, இன்றும் போட்டிகள் நடக்கின்றன.