/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடகள போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்; கந்தசாமி மெட்ரிக் பள்ளி முதலிடம்
/
தடகள போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்; கந்தசாமி மெட்ரிக் பள்ளி முதலிடம்
தடகள போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்; கந்தசாமி மெட்ரிக் பள்ளி முதலிடம்
தடகள போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்; கந்தசாமி மெட்ரிக் பள்ளி முதலிடம்
ADDED : செப் 18, 2025 09:55 PM

பொள்ளாச்சி; கோட்டூர் குறுமைய அளவிலான தடகளப் போட்டியில், 95 புள்ளிகள் பெற்று, கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்தம் சாம்பியன் பட்டம் வென்றது.
கோட்டூர் குறு மைய அளவிலான தடகளப் போட்டி, வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளியில் நடத்தப்பட்டது. அதில், கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக இடங்களில் வென்று அசத்தினர்.
அதன்படி, மாணவர், 19 வயது பிரிவு, 1,500 மீ., ஓட்டத்தில் நிதிஷ் இரண்டாமிடம், 800 மீ., ஓட்டத்தில் அகிலேஷ் இரண்டாமிடம், 400 மீ., தடை தாண்டுதலில் விஷ்ணுராம் முதலிடம், மும்முறை தாண்டுதல், 100 மீ., மற்றும் 110 மீ., ஓட்டத்தில் ரத்தீஷ் முதலிடம், விஷ்ணுராம் மூன்றாமிடம் பிடித்தனர்.
இதேபோல, குண்டு எறிதலில், தரணிஷ் இரண்டாமிடம், வட்டு எறிதலில் சஞ்சீவ் மூன்றாமிடம், ஈட்டி எறிதலில் விஷ்ணு முதலிடம், தொடர் ஓட்டத்தில் ரத்தீஷ், நித்திஷ், விஷ்ணு, அகிலேஷ் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
மாணவியர் நீளம் தாண்டுதலில் தர்ஷனா மூன்றாமிடம், 200 மீ., ஓட்டத்தில் காவியா மூன்றாமிடம் பிடித்தனர்.17 வயது பிரிவு உயரம் தாண்டுலில், கிருஷ்ணகுமார் இரண்டாமிடம், 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் மிதுன்குமார் முதலிடம், தடை தாண்டுதலில் திகந்த், சஞ்சய்சுமணன் ஆகியோர் இரண்டாமிடம், மும்முறை தாண்டுதலில் வித்தின் முதலிடம், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் கிரண்ராஜ் முதலிடம் பிடித்தனர்.
இதேபோல, தொடர் ஓட்டத்தில், வித்தின், தியாகு ஆகாஷ், பிரனேஷ் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
மாணவியர் நீளம் தாண்டுதல் மற்றும் 200 மீ., ஓட்டத்தில் ஜனனி இரண்டாமிடம், தொடர் ஓட்டத்தில் ஜனனி, காவியா, மிதுனா, அனுரிதா, விஸ்மிதா, யோகதாரணி, இலக்கியா, இலக்கியாஸ்ரீ -ஆகியோர் இரண்டாமிடம் வென்றனர்.
மேலும், 14 வயது பிரிவு, நீளம் தாண்டுதலில் வினோதினி இரண்டாமிடம், 100 மீ., ஓட்டத்தில் சாதனா இரண்டாமிடம், தொடர் ஓட்டத்தில் அனுஸ்ரீ, அபிதாஸ்ரீ, வினோதினி, சாதனா ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
19 வயது பிரிவில் ரத்தீஷ், 17 வயது பிரிவில் கிரண்ராஜ், மிதுன்குமார் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
இவர்களை, பள்ளித் தாளாளர் சண்முகம், செயலாளர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன், செல்வரசு பாராட்டினர்.