தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடகளம்; மாணவ, மாணவியர் அதகளம்

தடகளம்; மாணவ, மாணவியர் அதகளம்

தடகளம்; மாணவ, மாணவியர் அதகளம்


ADDED : செப் 28, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: முதல்வர் கோப்பை அனைத்து பிரிவினருக்கான தடகளப் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கின. மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள்  என 2,500க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கான 1,500 மீ., ஓட்டத்தில் நினத், ஆயுஷ்ராம், ஸ்ரீவர்சன் ஆகியோரும், மாணவியர் பிரிவில் சுசித்ரா, வேதவர்னா, மஹதி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

கல்லுாரி மாணவர்களுக்கான 5,000 மீ., ஓட்டத்தில் யோகேஸ்வர், ஹரிஹரன், ஹர்சத் ஆகியோரும், மாணவியருக்கான 3,000 மீ., ஓட்டத்தில் ஹேமதி, அமிர்தா, சங்கமித்ரா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து இன்றும் போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us