ADDED : செப் 28, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கோவை: ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட அமைப்பு சாரா பொது தொழிலாளர் சங்க மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுரவ தலைவராக ஆறுமுகம், தலைவராக சந்திரன், பொது செயலராக தங்கவேல், பொருளாளராக மகேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். புதிய துணை தலைவர்கள், மாவட்ட செயலர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.3,000 தீபாவளி போனஸ், பதிவு செய்த உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் வீடு, கல்வி, திருமணம், விபத்து மரணம் ஆகியவற்றுக்கு உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
