ADDED : செப் 28, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கோவை: திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சுயதொழில் துவங்க மானியம் வழங்கும் திட்டம் 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 811 திருநங்கைகள் பயனடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் ஏழு திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் சுயதொழில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
