ADDED : செப் 28, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கோவை: அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மாநகரில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனைக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
‘ஆடு, மாடு, கோழி, பன்றிகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை செய்யப்படுகிறது. உக்கடம், சத்தி ரோடு மற்றும் போத்தனூரில் உள்ள ஆடு, மாடு அறுவை மனைகள் செயல்படாது. உத்தரவை மீறி செயல்பட்டால், அபராதம், பறிமுதல், உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா எச்சரித்துள்ளார்.
