/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை அடிவாரத்தில் ஏ.டி.எம்., மையம் தேவை
/
மருதமலை அடிவாரத்தில் ஏ.டி.எம்., மையம் தேவை
ADDED : ஜூன் 10, 2025 10:00 PM
வடவள்ளி; மருதமலை அடிவாரத்தில், பக்தர்களின் வசதிக்காக, ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, இக்கோவிலுக்கு நாளுக்குநாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மருதமலை அடிவாரத்தில், ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கோவிலில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள பாரதியார் பல்கலை.,யில் உள்ள ஏ.டி.எம்., மையத்துக்கு சென்று, பணம் எடுக்க வேண்டியுள்ளது.
மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஏ.டி.எம்., மையம் அமைக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.