/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் மீது தாக்குதல்; 13 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
/
மாணவர் மீது தாக்குதல்; 13 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 24, 2025 01:34 AM
போத்தனுார் : கோவையில் முதுகலை மாணவரை தாக்கிய இன்ஜி., கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லுாரியில், முதுகலை கிரிமினாலஜி முதலாமாண்டு படிப்பவர், சென்னை, எண்ணுாரை சேர்ந்த 21 வயது மாணவர். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார். அதே விடுதியில் இன்ஜி., கல்லுாரி மாணவர்களும் தங்கி உள்ளனர்.
ஒரு மாதமாக, இன்ஜி.. கல்லுாரி மாணவர்களின் அறைகளிலிருந்து, 1,000, 2,000 என, மொத்தம், 22,000 ரூபாய் திருடு போனது.
கடந்த, 20ம் தேதி இரவு, கல்லுாரியில் முதலாமாண்டு பயிலும், 13 மாணவர்கள், சென்னை மாணவர் பணத்தை திருடியதாக கருதி, தங்கள் அறைக்கு அழைத்துச்சென்று, மறுநாள் வரை தாக்கியது தெரிந்தது.
இதையறிந்த மாணவனின் பெற்றோர், கோவை வந்து தங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அன்று மாலை கல்லுாரி முதல்வர் விசாரித்து, 13 மாணவர்களையும் சஸ்பெண்ட செய்துள்ளார்.
கல்லுாரி தரப்பில் விடுதி வார்டன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'இச்சம்பவம் ராகிங் அல்ல. பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு தாக்கியுள்ளனர்.
'சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கென அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட மாணவர், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியுள்ளார்.