/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை
/
வாலிபர் மீது தாக்குதல்; இருவரிடம் விசாரணை
ADDED : மார் 30, 2025 11:12 PM
கோவை; சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை உக்கடம் நரசிம்மர் கோவில் அருகே, நேற்று காலை இருவர் சேர்ந்து, ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார், படுகாயத்துடன் கிடந்த, 40 வயது மதிக்கத்தக்க நபரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. போலீசார் அவரை தாக்கிய, 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.