/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை
/
பெண் உட்பட மூவர் மீது தாக்குதல்; மூவருக்கு வலை
ADDED : ஆக 31, 2025 11:32 PM
போத்தனூர்; கோவை, போத்தனூர், செட்டிபாளையம் சாலையிலுள்ள ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர், 34. கடந்த, 29ல் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது, குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில் சிவசங்கர், சம்பத்குமார் மற்றும் தங்கமணி ஆகியோருடன் நடனம் ஆடினார்.
அப்போது ஒருவர் இவர்களுடன் வந்து நடனமாடியபடி மேலே விழுந்தார். இதுகுறித்து சிவசங்கர் கேட்டபோது, அவரையும், சம்பத்குமாரையும் கைகளாலும், கல்லாலும் தாக்கினார். மேலும் இருவர் அந்நபருடன் சேர்ந்து தாக்கினர்.
அப்போது தங்கமணி அவர்களை கேட்டபோது, அவரை கீழே தள்ளிவிட்டு, திட்டிச்சென்றனர்; மூவருக்கும் காயமேற்பட்டது. சிவசங்கர் புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, பிரசாந்த், கெவின் மற்றும் ராபின் ஆகிய மூவரை தேடுகின்றனர்.