/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலை நீர்வழிப்பாதையில் மண் கொட்டி கடை அமைக்க முயற்சி
/
ஊட்டி சாலை நீர்வழிப்பாதையில் மண் கொட்டி கடை அமைக்க முயற்சி
ஊட்டி சாலை நீர்வழிப்பாதையில் மண் கொட்டி கடை அமைக்க முயற்சி
ஊட்டி சாலை நீர்வழிப்பாதையில் மண் கொட்டி கடை அமைக்க முயற்சி
ADDED : ஏப் 17, 2025 11:07 PM

மேட்டுப்பாளையம், ; ஊட்டி சாலையில் நீர்வழிப்பாதையை, சிலர் மண் கொட்டி மறைத்து, கடைகள் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து கல்லாறு வரை, ஊட்டி சாலையின் இரு பக்கம், மழை நீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பராமரிக்காததால், மரம், செடிகள் வளர்ந்தும், பல இடங்களில் மண் மூடியும் உள்ளது. மண் மூடிய இடங்களில் சாலையின் ஓரத்தில் கடைகள், கார் ஒர்க் ஷாப் அமைத்துள்ளனர்.
யானைகள் இரவில் சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளை சேதப்படுத்தி, பழம் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. தற்காலிக கடைகளால் ஊட்டி சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும் சாலையின் ஓரங்களில் புதிது புதிதாக கடைகளை அமைத்து வருகின்றனர்.
கோடை சீசன் துவங்கியதை அடுத்து, மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் செல்கின்றனர். வாகனங்களை நிறுத்தி சாலையின் ஓரங்களில் உள்ள தற்காலிக கடைகளில், பொருட்களை சுற்றுலா பயணியர் வாங்கி வருகின்றனர். சிலர் ஊட்டி சாலையின் ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை, இயந்திரங்கள் வாயிலாக மண் கொட்டி சமன் செய்து, அதன் மீது கடைகளை நிரந்தரமாக அமைத்துள்ளனர். தற்போது சாலையின் ஓரங்களில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளி குமாரிடம் கேட்டபோது, ''ஊட்டி சாலையில் உள்ள கடைகள் உள்பட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.