sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பொதுப் பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி: நல்லவேளை தடுத்து நிறுத்தம்

/

 பொதுப் பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி: நல்லவேளை தடுத்து நிறுத்தம்

 பொதுப் பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி: நல்லவேளை தடுத்து நிறுத்தம்

 பொதுப் பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி: நல்லவேளை தடுத்து நிறுத்தம்


ADDED : பிப் 05, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: பொதுப் பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

அன்னூர்- அவிநாசி சாலையில், கஞ்சப்பள்ளி பிரிவு அருகே தனியார் 'லே-அவுட்' உள்ளது. இந்த 'லே-அவுட்'டில் உள்ள பிரதான சாலை ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதையை 'லே-அவுட்'டின் பின்புறம் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பாதையை மறித்து வழிபாட்டு தலம் அமைக்க சிலர் முயற்சித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், ஊராட்சி நிர்வாகம், தாலுகா அலுவலகம் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

தாசில்தார் யமுனா, வருவாய் ஆய்வாளர் குருநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீமன் மற்றும் போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். ஊராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

பின்புறம் உள்ள விவசாயிகள் தாங்கள ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us