/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
/
'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ADDED : ஜூலை 17, 2025 10:23 PM

கோவை; கோவையில், மாநகராட்சிக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 42 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது; அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு, தடுத்து நிறுத்தினர்.
கோவை மாநகராட்சி, 85வது வார்டில், போத்தனுார் அருகே கருணாநிதி நகர் உள்ளது. குறிச்சி பேரூராட்சியாக இருந்தபோது, இந்நகர் உருவாகியிருக்கிறது. மொத்தம் நான்கு ஏக்கர், 47 சென்ட் பரப்பு கொண்டது; 41 மனைகளாக பிரிக்கப்பட்டன. 10 சதவீதம் பொது ஒதுக்கீடு இடமாக, 42 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டது.
இப்பகுதியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியவர்களை எதிர்த்து சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததுடன், எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க, 2023ல் உத்தரவிடப்பட்டது. ஆனால், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.
தற்போது, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை, ஆளுங்கட்சி பிரமுகர் ஆக்கிரமித்து, சுற்றிலும் கம்பி வேலி போடுவதற்கு முயற்சித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், போலீசார் சேர்ந்து, கம்பி வேலி போடுவதை தடுத்து நிறுத்தினர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை பாதுகாத்துள்ளனர்.
அங்குள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி, சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதோடு, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்கிற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும், அவ்விடத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாத அளவுக்கு, மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு பத்திரப்பதிவுத்துறையினர் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.