/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியக்க வைக்கும் மாணவர் கதைகள் புத்தகமாக வெளியிட முயற்சி
/
வியக்க வைக்கும் மாணவர் கதைகள் புத்தகமாக வெளியிட முயற்சி
வியக்க வைக்கும் மாணவர் கதைகள் புத்தகமாக வெளியிட முயற்சி
வியக்க வைக்கும் மாணவர் கதைகள் புத்தகமாக வெளியிட முயற்சி
ADDED : டிச 24, 2024 10:33 PM

பொள்ளாச்சி,; பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கதைகள், புத்தகப் பதிப்பாக வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியரின் 'வாகை வாசகர் வட்டம்' செயல்படுகிறது.இதில், 15 மாணவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
அவர்கள், விடுமுறை நாளில், பள்ளிக்கு வந்து நுாலக புத்தகங்களை வாசித்தும், வாசித்ததில் பிடித்த செய்திகளை சக மாணவர்களிடம் கலந்துரையாடி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
அதன்படி, வாகை வாசகர் வட்டத்தின், 10வது நிகழ்வு, பெத்தநாயக்கனுாரில் உள்ள மாணவரின் வீட்டில் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு கதை புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, புத்தகங்களை வாசிக்கச் செய்து, அதில் உள்ள தகவல்களை உள்ளடக்கி கலந்துரையாடவும் எடுத்துரைக்கப்பட்டது.
மாணவ, மாணவியரும் அவ்வாறே தகவல்கள் குறித்து பேசியும், கதைகளைக் கூறியும் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வை, பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் அம்சபிரியா ஒருங்கிணைத்தும் வரும் நிலையில், தமிழ் ஆசிரியர் பாலமுருகன் மாணவர்களின் வாசிப்பை ஊக்குவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'வாசிப்பு காரணமாக, மாணவர்களிடையே நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், படைப்பாற்றல் உருவாகுகிறது. வாகை வாசகர் வட்டத்தில் உள்ள மாணவர்களின் படைப்புகள், தமிழக அரசின் தேன்சிட்டு சிறார் இதழில் பலமுறை வெளியாகியுள்ளது. தற்போது, மாணவர்களின் கதைகள், புத்தக பதிப்பாக வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,' என்றனர்.