/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி
/
பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி
ADDED : ஜன 14, 2025 03:54 AM
மணியகாரன்பாளையம்: கோவை மணியகாரன்பாளையம் அருகே உடையாம்பாளையம் பகுதியில் இரு நாட்களுக்கு முன், கோவில் அருகில், 'பீப்' எனும் மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்ய, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகி சுப்ரமணி, ஊர் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர், பீப் பிரியாணி கடை நடத்திய ஆபிதா, ரவி தம்பதியை மிரட்டியதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பா.ஜ., நிர்வாகி சுப்ரமணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, ஆதி தமிழர் கட்சியினர், கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகம் மீது, மாட்டிறைச்சி வீச முயன்றனர்.
இதுகுறித்து, முன்னரே தகவலறிந்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் சத்யன் தலைமையில், கட்சியினர் மாட்டிறைச்சியுடன் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். பா.ஜ., அலுவலகத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

