/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்து கடை உரிமையாளர்களிடம் ஆன்லைனில் மோசடிக்கு முயற்சி
/
மருந்து கடை உரிமையாளர்களிடம் ஆன்லைனில் மோசடிக்கு முயற்சி
மருந்து கடை உரிமையாளர்களிடம் ஆன்லைனில் மோசடிக்கு முயற்சி
மருந்து கடை உரிமையாளர்களிடம் ஆன்லைனில் மோசடிக்கு முயற்சி
ADDED : பிப் 12, 2024 12:16 AM
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடை உரிமையாளர்களிடம் ஆன்லைனில் பண மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. கடைக்காரர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் பணம் தப்பியது.
கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் கடையில் இருந்தபோது, செல்போனில் தொடர்பு கொண்ட நபர், இந்தியில் பேசி, குறிப்பிட்ட மருந்துகள் வேண்டும் என, கூறியுள்ளார். அவற்றை எடுத்து வைக்குமாறும் பணத்தை கொடுத்து விட்டு வாங்கி கொள்வதாகவும் கூறியுள்ளார். 2 ஆயிரத்து, 377 ரூபாய்க்கு மருந்துகளை ஆர்டர் செய்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்த அந்த நபர், உங்களது கூகுள் பே நெம்பரை அனுப்புங்கள். அதில் பணத்தை பரிமாற்றம் செய்கிறேன். அதன்பின் என்னுடைய நண்பர் வந்து மருந்துகளை பெற்றுக்கொள்வார், என, கூறியுள்ளார்.
இதையடுத்து, ஒரு ரூபாய் பணத்தை அனுப்பி விட்டு, பணம் வந்து விட்டதா என செக் செய்யுமாறு கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டு, 2 ஆயிரத்து, ௩77 ரூபாய்க்கு பதிலாக, 23 ஆயிரத்து, 377 ரூபாய் பணத்தை அனுப்பி விட்டேன் என, கூறியுள்ளார். உடனே பில் தொகை போக, மீதி பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
அதற்கு, கடை உரிமையாளர், வங்கி கணக்கை சரிபார்த்து அனுப்புகிறேன் என, கூறியுள்ளார். அதற்கு அந்நபர் மிரட்டல் விடுத்துள்ளார். உஷாரான மருந்துகடைக்காரர், வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார். அதில், எந்தவொரு பணமும் வரவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சிஅடைந்தார். இதையடுத்து, மருந்து கடை உரிமையாளர், வந்த ஸ்கீரின் ஷாட்டுகள் போலியானவை எனத்தெரிந்து கொண்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.