/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் தர மறுத்ததால் கொலை செய்ய முயற்சி
/
பணம் தர மறுத்ததால் கொலை செய்ய முயற்சி
ADDED : அக் 14, 2025 10:22 PM
கோவை; சொக்கம்புதுார் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் குருவாயூரப்பன், 34. தனது தந்தை கனகராஜ் உடன் கேபிள் டி.வி., இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவர்களது அலுவலகம் அருகே அவரது சகோதரி நிக்கியா, அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
கனகராஜின் நண்பர் ரத்தினத்தின் மகன், ராமகிருஷ்ணன், 35 என்பவர் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்தார். ராமகிருஷ்ணன், கனகராஜ் மற்றும் அவரது மகளின் கடைக்கு சென்று பணம் வசூல் செய்து வந்தார். நண்பரின் மகன் என்பதால், கனகராஜ் அவருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிக்கியாவின் அழகு நிலையத்துக்கு வந்த ராமகிருஷ்ணன், குருவாயூரப்பனிடம் பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
குருவாயூரப்பன் மறுத்துள்ளார். ராமகிருஷ்ணன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால், குத்தி தப்பினார்.
படுகாயமடைந்த குருவாயூரப்பன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த செல்வபுரம் போலீசார், ராமகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.