/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை கோர்ட்டில் திருட்டு முயற்சி
/
மதுக்கரை கோர்ட்டில் திருட்டு முயற்சி
ADDED : ஆக 18, 2025 01:15 AM
போத்தனூர்:
கோவை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை கோர்ட் செயல்படுகிறது. இங்கு டைப்பிஸ்டாக கணேசன், 31 என்பவர் பணிபுரிகிறார். சுதந்திர தின விழாவிற்கு பின், கோர்ட்டின் அனைத்து அறைகளையும் பூட்டிய பின் சாவியை, முதல் தளத்தில் தலைமை எழுத்தர் அறையில் வைத்து, சாவியை ஸ்விட்ச் பாக்ஸில் வைத்து சென்றார்.
நேற்று முன்தினம் காலை, தலைமை எழுத்தர் அறை பூட்டு உடைக் கப்பட்டு கதவு திறந்திருந்தது. பீரோ, சிடி பைல், எல்.இ.டி. டிவி ஆகியவை கலைந்த நிலையில் காணப்பட்டது. பீரோக்களை சரிபார்த்தபோது, திருட்டு முயற்சி நடந்திருப்பது தெரிந்தது.
மாஜிஸ்திரேட், மதுக்கரை பார் அசோசியேஷன் தலைவர் பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு, கணேசன் தகவல் தெரிவித்தார்.
மதுக்கரை போலீசில் தலைமை எழுத்தர் ஷர்மிளா, கணேசன், அலுவலக உதவியாளர் சுபாஷ் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபரை தேடுகின்றனர்.