/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் வாங்க ஆளில்லை; ரேஷன்கடை ஊழியர்கள் குமுறல்
/
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் வாங்க ஆளில்லை; ரேஷன்கடை ஊழியர்கள் குமுறல்
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் வாங்க ஆளில்லை; ரேஷன்கடை ஊழியர்கள் குமுறல்
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் வாங்க ஆளில்லை; ரேஷன்கடை ஊழியர்கள் குமுறல்
ADDED : ஆக 17, 2025 11:33 PM
கோவை; 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின்படி, வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் மூலம் கோவையில், 85 ஆயிரத்துக்கும் 177 கார்டுதாரர்களுக்கு, வாகனங்களில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் பணியை, துவங்கி இருக்கிறோம்.
பொருட்கள் கொண்டு செல்லும்போது, வீடு பூட்டி இருக்கிறது. சிலர் வெளியூர் அல்லது வேலைக்கு சென்று விடுகின்றனர். பொருட்கள் வழங்கும், பி. ஓ.எஸ்., மெஷின் இயங்குவதில்லை. இதனால் பில் போட முடியவில்லை. கார்டுதாரரிடம் கைரேகை பெற்று, வண்டிக்கு வந்து பொருட்களை எடை போடும் போது, பி.ஓ.எஸ்., கருவி 'கனெக்ட்' ஆவதில்லை.
கார்டுதாரர்கள் சிலர், 'நீங்கள் ஏன் எங்களுக்கு போன் பண்ணுகிறீர்கள்; எங்களுக்கு தேவைப்படும் போது, நாங்களே வந்து கடையில் வாங்கிக் கொள்கிறோம்' என்கின்றனர்.
50 கார்டுதாரர்களுக்கான பொருட்களை ஏற்றிச் சென்றால், 10 கார்டுதாரர்களுக்குதான் வழங்க முடிகிறது. சனி, ஞாயிறு மட்டுமே வினியோகம் என்பதால், பலர் வெளியூர் சென்று விடுகின்றனர். வீண் அலைச்சல்தான் மிஞ்சுகிறது. இப்படி பல நடைமுறை சிக்கல்கள், இந்த திட்டத்தில் உள்ளன. அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.