UPDATED : ஆக 21, 2026 07:31 PM
ADDED : ஆக 21, 2026 02:10 PM
வழுக்குப்பாறை:
வழக்குப்பாறை அருகேயுள்ள தம்பாகவுண்டன்பாளையம், வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் மாலீஷ்வரன், 50. அதிகாலை தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
விவசாய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. மாலீஷ்வரன் சென்று பார்த்தபோது, ஒருவர் ஓடுவதை கண்டார். மனைவியுடன் அந்நபரை துரத்திய போது, ஆதிதிராவிடர் காலனியில் மொபட்டுடன் காத்திருந்த பெண்ணுடன் அந்நபர் தப்ப முயன்றார்.
மாலீஷ்வரன் இருவரையும் பிடித்தார். அந்நபர் கத்தி, இரும்பு ராடு வைத்திருப்பதும், விவசாய பொருட்கள், மோட்டார்களை திருட முயன்றதும் தெரிந்தது.
இருவரையும் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், அண்ணா நகரை சேர்ந்த பிரகாஷ், 35, அவரது மனைவி துர்கா தேவி, 34 என தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
