/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கவனத்துக்கு... மெட்ரோ ரயில் திட்ட சிக்கல்களுக்கு தீர்வு எப்போது?

ADDED : நவ 05, 2024 11:44 PM

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கள ஆய்வு செய்து, முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடுகளை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. 2024 பிப்., 16ல் ஒப்புதல் அளித்த தமிழக அரசு, நிதியுதவிக்காக, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
'மெட்ரோ' திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், விரிவான திட்ட அறிக்கையோடு, 'காம்ப்ரிஹென்சிவ் மொபிலிட்டி பிளான்' வேறொரு வழித்தடத்துக்கு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். இவ்விரு அறிக்கைகளை அனுப்பாததால், 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை திரும்பி வந்திருக்கிறது. திட்ட அறிக்கையில் உள்ள சிக்கல்கள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.