ADDED : அக் 29, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: அங்கலக்குறிச்சி கோட்டத்தில் ஆனைமலை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. அதில், பாரதி நகர், பகிர்மானத்தில், நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்யப்படவில்லை.
எனவே, இந்த பகிர்மானத்தில் உள்ள மின் நுகர்வோர், ஆக., மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தலாம். அறிவிப்பு பெறப்பட்ட, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இத்தகவலை, அங்கலக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

