/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவனம் ஈர்த்த மண் படைப்புகள்: திறமை வெளிப்படுத்திய கலைஞர்கள்
/
கவனம் ஈர்த்த மண் படைப்புகள்: திறமை வெளிப்படுத்திய கலைஞர்கள்
கவனம் ஈர்த்த மண் படைப்புகள்: திறமை வெளிப்படுத்திய கலைஞர்கள்
கவனம் ஈர்த்த மண் படைப்புகள்: திறமை வெளிப்படுத்திய கலைஞர்கள்
ADDED : டிச 27, 2024 10:54 PM

பொள்ளாச்சி, ; மண்ணில், அணிகலன்கள், மேஜிக் விளக்கு, செல்போன் ஸ்டாண்ட் என செய்து மண்பாண்ட கலைஞர்கள் அசத்தினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மண்பாண்ட கலைஞர்கள், மண்பானை, கார்த்திகை தீப விளக்குகள், உருவார பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மண்பாண்ட கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தவும், இத்தொழிலில் நவீனத்தை புகுத்த மத்திய அரசின், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரத்தில் மண்பாண்ட கலைஞர்கள், 20 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பயிற்சியாளர் பாலமுருகன் கூறுவதை கவனித்து, தங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்தி கலைஞர்கள் அசத்தினர்.
மேஜிக் விளக்கு, கழுத்தில் அணியும் அணிகலன்கள், சாம்பிராணி வைக்கும் பொருள், மொபைல் ஸ்டாண்ட் போன்றவை தயாரித்து அசத்தினர். ஒவ்வொரு பொருட்களையும் வடிவமைத்த விதம் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.
பயிற்சியாளர்கள் கூறுகையில், 'பயிற்சி அளித்த, 10 நாட்களும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பொன்னான நாட்களாக இருந்தது. ஒவ்வொரு நாளும், புதிது, புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
தற்போது, 15 வகையான பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். கலைஞர்கள் சிந்தனையை மேம்படுத்தினால், 500 வகையான பொருட்களை கூட தயாரிக்க முடியும். இது மண்பாண்ட கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்ல உதவும்,' என்றனர்.