ADDED : ஏப் 29, 2025 11:29 PM
மேட்டுப்பாளையம், ; காரமடை அருகே கட்டாஞ்சி மலையில் யானை, காட்டு பன்றி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூரில் கட்டாஞ்சி மலை உள்ளது.
கோவையில் இருந்து வருவோர் பெரியநாயக்கன்பாளையம் வழியாக கட்டாஞ்சி மலைப்பாதை சாலை வழியாக வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியும். இதனால் கட்டாஞ்சி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கட்டாஞ்சி மலைப்பாதையில் தற்போது யானைகள், காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் கட்டாஞ்சியில் வனவிலங்குகள் உலா வருகின்றன.
இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது, என்றனர்.----

