/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளை வாடகைக்கு பயன்படுத்த ஏலம்
/
கடைகளை வாடகைக்கு பயன்படுத்த ஏலம்
ADDED : டிச 07, 2025 07:30 AM
அன்னூர்: பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏலம் விடப்பட்டது.
அன்னூர் பேரூராட்சிக்கு சொந்தமாக, பஸ் ஸ்டாண்டிலும், மேட்டுப்பாளையம் சாலையிலும் வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில் காலியாக உள்ள கடைகளை, வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள, இரு வாரங்களுக்கு முன்பு ஏலம் நடந்தது.
எனினும் ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டதால், மறு ஏலத்துக்கு உத்தரவிடப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலையில் வணிக வளாகத்தில், முதல் தளத்தில் உள்ள மூன்று கடைகளும், பஸ் ஸ்டாண்டில் ஒரு கடையும் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள மறுஏலம் விடப்பட்டது.
கடந்த ஏலத்தை விட கூடுதலாக ஏலம் கோரப்பட்டதை எடுத்து, ஏலத்தொகை உறுதி செய்யப்பட்டது. இதனால் பேரூராட்சிக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலத்தில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

