/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒழுங்குமுறை கூடத்தில் இன்று ஏல விற்பனை
/
ஒழுங்குமுறை கூடத்தில் இன்று ஏல விற்பனை
ADDED : ஜூன் 24, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை, வாழைத்தார் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் புதன் தோறும் ஏல விற்பனை நடைபெறுகிறது.
'விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று பயன் பெறலாம். விவசாயிகள் எந்த கமிஷனும் தரத் தேவையில்லை. விளை பொருட்களை இருப்பு வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
நல்ல விலை வரும் போது விற்பனை செய்யலாம். தேசிய அளவில் மற்ற சந்தைகளின் விலை நிலவரத்தையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.