/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தணிக்கை அறிக்கை அடிப்படையில் ஆய்வு; சட்டசபை பொது கணக்கு குழு அறிவிப்பு

ADDED : ஜூலை 31, 2025 11:32 PM
கோவை; அரசுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் கூறினார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழகசட்டசபைபொது கணக்குகுழு சார்பில் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கணக்குகுழு தலைவர் செல்வபெருந்தகை தலைமை வகித்து பேசியதாவது: கோவையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நிதித்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையங்கள் துறை, உயர்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் அலுவலர்களிடம் தணிக்கை அறிக்கையில் கண்டுள்ள படி விரிவானஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டசபை இணைச்செயலாளர் ரேவதி, துணைச் செயலாளர்கள் சுமதி, பாலசீனிவாசன், கோவை கலெக்டர் எஸ்.பி., கார்த்திகேயன் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.