/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஏற்றது ஆணையம்
/
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஏற்றது ஆணையம்
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஏற்றது ஆணையம்
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஏற்றது ஆணையம்
ADDED : நவ 06, 2024 11:46 PM

கோவை ; கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய கையகப்படுத்திய நிலத்தை ஏற்றுக்கொண்டதாக, இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்றுக் கொண்டதாக கடிதம் வழங்கியுள்ளது. இதன் மூலம் இதுநாள் வரை இருந்த தடை விலகியிருக்கிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர் இருகூர் கிராமங்களில், 634.82 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.
ரூ.2088.92 கோடி ஒதுக்கி, நில உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி, கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலத்தை, எவ்வித நிபந்தனையுமின்றி, இலவசமாக, 99 ஆண்டு குத்தகைக்கு, கடந்த ஆக., மாதம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான கடிதம், தமிழக அரசு சார்பில் ஆணைய தலைவருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆணையம் தரப்பில் ஏற்காமல் இருந்ததால் சிக்கல் நீடித்தது.
மாவட்ட நிர்வாகத்தில் இருந்து, ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காணப்பட்டது. இதன்பின், தமிழக அரசு ஒப்படைத்த நிலத்தை ஏற்றுக்கொண்டதாக, இந்திய விமான நிலையம் ஆணையம் கடிதம் வழங்கியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, ஆணைய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசித்தார். விமான நிலைய சுற்று வட்டார சாலைகளை மேம்படுத்துவது மற்றும் மாற்றுப்பாதைகள் அமைப்பது; இதர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால், விமான நிலையத்தில் இருந்து அப்பகுதிக்குச் செல்வதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தி, ரோடு வசதி ஏற்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்திய இடங்களில் கட்டுமானங்கள் இருந்தால், அவற்றை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றி, சர்வே கற்கள் நட்டுக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.