/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறியாளர்களுக்கு ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு
/
விசைத்தறியாளர்களுக்கு ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு
ADDED : ஏப் 14, 2025 11:03 PM
சோமனூர்; கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கடையடைப்பு நடக்கிறது. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஆட்டோக்களை இயக்குவதில்லை, என, அண்ணா ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் விசைத்தறியாளர்கள் மத்தியில், 'உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஓரிரு நாளில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் மற்றும் நாம் தமிழர், மா.கம்யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இந்நிலையில், நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.