/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ பிரேக் செயலிழப்பு; மூன்று வயது குழந்தை பலி
/
ஆட்டோ பிரேக் செயலிழப்பு; மூன்று வயது குழந்தை பலி
ADDED : ஜூலை 29, 2025 08:46 PM
கோவை; சரக்கு ஆட்டோ விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்தது.
கோவை சிட்கோ காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 60; சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். மூன்று வயது பேரன் கதிர்வேலை பள்ளியில் விடுவதற்காக, ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். அவரது மகள் லலிதாவும் உடன் சென்றார் .
பிள்ளையார்புரம் குவார்ட்டர்ஸில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் ரோடு நோக்கி செல்லும் போது, பிரேக் செயல் இழந்தது. கட்டுப்பாடு இழந்த ஆட்டோ, அருகில் இருந்த பொது கழிப்பிடத்தில் மோதி கவிழ்ந்தது.
குழந்தைக்கு பலமான காயம் ஏற்பட்டது. ராதாகிருஷ்ணன், லலிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த ஊர்காவல் படையை சேர்ந்த ரோஹித் என்பவர், அதே ஆட்டோவில் மூவரையும் பிள்ளையார்புரம் அழைத்து சென்றார். அங்கிருந்து ஆம்புலன்சில் மூவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். கோவை மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.