/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது
ADDED : செப் 12, 2025 07:37 AM
கோவை; கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு, 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இச்சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் பள்ளிக்கு, அதே பகுதியை சேர்ந்த கணேசன்,45 என்பவரின் ஆட்டோவில் சென்று வந்தாள்.
இந்நிலையில், நேற்று மாலை, வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தை விட, ஒரு மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்தாள். சிறுமியிடம், பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், கணேசன், சிறுமிக்கு பாலியல் கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.