ADDED : ஏப் 09, 2025 12:29 AM
கோவை,; ராமநாதபுரம் பகுதியில் ஆட்டோவில் மர்மமான முறையில், இறந்து கிடந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம், ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 42; ஆட்டோ ஓட்டுநர். இவரின் தாயார் உடல் நலம் சரியில்லாததால், பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 6ம் தேதி இரவு, மருத்துவமனைக்கு சென்று தாயை பார்த்து விட்டு வீடு திரும்பினார். பின்னர், ஆட்டோவை ராமலிங்க ஜோதி நகரில் உள்ள, தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு ஆட்டோவில் துாங்கினார். நள்ளிரவில் நந்தகுமாரின் அண்ணன் சென்று பார்த்த போது, அவர் ஆட்டோவில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து நந்தகுமாரின் மனைவி சுகந்தி, 38 ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.