/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை முயற்சி வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு சிறை
/
கொலை முயற்சி வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு சிறை
ADDED : டிச 13, 2025 06:37 AM
கோவை: உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது பைசல்; டாக்சி டிரைவர். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 2021, மே 27ல் சவாரிக்கு காத்திருந்த போது, ஒரு பயணி டாக்சியை வாடகைக்கு கேட்டார். அப்போது, நவாஸ் என்பவர் கேட்டு கொண்டதால், அந்த பயணியை அவரது ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.
இதை பார்த்த, செல்வபுரம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சூர்யா,28, என்பவர் தகராறு செய்து அந்த பயணியை அழைத்து சென்றார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், சூர்யா ஆத்திரமடைந்து முகமது பைசலை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, சூர்யாவை கைது செய்தனர். இவர் மீது, கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம்சாட்டப்பட்ட சூர்யாவுக்கு இரண்டு ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.

