ADDED : டிச 13, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமுகை: சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதி, அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, 'பொறிக்காதன்' என்று மக்களால் அழைக்கப்படும், ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.
நேற்று அதிகாலை லிங்காபுரத்தை சேர்ந்த விவசாயி மாரிச்சாமி, 45, லிங்காபுரம் வனச்சோதனைச் சாவடி அருகே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த யானை, அவரை துரத்தி தாக்கியது. இதில் அவர் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

