/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2025 05:36 AM

கோவை: ஆட்டோக்களுக்கு எப்.சி. கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து, கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டுக் கமிட்டி தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பெரு நிறுவனங்களின் வரவு, ஆன்லைன் அபராதம் உள்ளிட்டவற்றால், ஆட்டோ தொழில் நெருக்கடியில் உள்ளது. எப்.சி.,கட்டணத்தை ரூ.600ல் இருந்து, ரூ.9 ஆயிரத்து 60 வரை உயர்த்தியிருப்பது, ஆட்டோ தொழிலாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. கேரளாவைப் போல மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டுக் கமிட்டி செயலாளர் வணங்காமுடி, சி.ஐ.டி.யு. பொதுசெயலாளர் முத்துக்குமார், ஏ.டி.பி. தலைவர் ராஜன், ஏ.ஐ.டி.யு.சி. வெங்கடாசலம், எம்.எல்.எப். ஷாஜகான், எஸ்.டி.டி.யு. ஷாஜகான், எம்.டி.எஸ். அபுதாகிர் அசாருதீன், எப்.ஐ.டி.யு. ஆறுமுகப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

