/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4 வழி சாலை சந்திப்பில் போலீஸ் வைத்த தானியங்கி சிக்னல் பேட்டரிகள் திருட்டு
/
4 வழி சாலை சந்திப்பில் போலீஸ் வைத்த தானியங்கி சிக்னல் பேட்டரிகள் திருட்டு
4 வழி சாலை சந்திப்பில் போலீஸ் வைத்த தானியங்கி சிக்னல் பேட்டரிகள் திருட்டு
4 வழி சாலை சந்திப்பில் போலீஸ் வைத்த தானியங்கி சிக்னல் பேட்டரிகள் திருட்டு
ADDED : பிப் 05, 2025 12:21 AM

மேட்டுப்பாளையம்; நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், போலீசார் வைத்துள்ள தானியங்கி சிக்னலில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் பல இடங்களில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்கள் உள்ளன. அதில் காய்கறி மண்டிகள் நிறைந்த மேட்டுப்பகுதியில், இரவில் வாகனங்கள் வருவது சரியாக தெரிவதில்லை. அதனால் இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
இதை குறைக்க சிறுமுகை போலீசார், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், சாலையின் இரண்டு பக்கம் தானியங்கி சிக்னல்கள் வைத்துள்ளனர். அதில், சோலார் முறையில் சார்ஜ் ஏறும் பேட்டரி வைத்து, அதன் வாயிலாக சிக்னல் சிகப்பு விளக்கு எரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த இடத்தில் மெதுவாக வாகனங்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவிப்பும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிக்னல் வைத்த பின், இந்த இடத்தில் விபத்துக்கள் ஏதும் நடைபெறவில்லை. இந்நிலையில் சிக்னலில் இருந்த இரண்டு பேட்டரிகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். ஒரு பக்கம் இருந்த சிக்னல் லைட் செட்டோடு திருடி சென்றுள்ளனர். மற்றொரு பக்கம் பேட்டரியை மட்டும் திருடிச் சென்று விட்டனர்.
பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன் கூறியதாவது:
இரவில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனம் போக்குவரத்து இல்லாத நேரத்தில், தானியங்கி சிக்னல் பெட்டியில் உள்ள பேட்டரிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஊராட்சியில் உள்ள மயானங்களில், சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதிலும் இருந்த பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர்.
இரவில் சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களை, போலீசார் சோதனை செய்தால், இது மாதிரியான திருட்டை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.