/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபராதத்துக்கு தானியங்கி முறை; 3ஏ1க்கு இல்லை தொழில்முனைவோர் கடும் அதிருப்தி
/
அபராதத்துக்கு தானியங்கி முறை; 3ஏ1க்கு இல்லை தொழில்முனைவோர் கடும் அதிருப்தி
அபராதத்துக்கு தானியங்கி முறை; 3ஏ1க்கு இல்லை தொழில்முனைவோர் கடும் அதிருப்தி
அபராதத்துக்கு தானியங்கி முறை; 3ஏ1க்கு இல்லை தொழில்முனைவோர் கடும் அதிருப்தி
ADDED : ஜன 24, 2025 11:03 PM
கோவை; கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நடராஜன், ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு, 3பி கட்டணத்தில் இருந்து 3ஏ1 கட்டணத்துக்கு மின் இணைப்புகளை மாற்றிக் கொடுக்க, 2023 செப்., 29ல் அரசு உத்தரவிட்டும், அரசாணை வெளியிட்டும், அதற்கான மானியத் தொகைய மின்வாரியத்துக்கு அரசு ஒதுக்கீடு செய்தும், மின் வாரியம் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதையடுத்து, மின்வாரியமே கட்டண வகைப்பாட்டை, தானியங்கி முறையில் மாற்ற வேண்டும் என முதல்வரிடம், போசியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை, மின் நுகர்வோரே மாற்றிக் கொள்ள வேண்டும் என, மின் வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கடந்த 23ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது குறுந்தொழில் முனைவோருக்கு, வேதனையளிப்பதாகவும், சுமை தருவதாகவும் உள்ளது.
2024 ஜூனில், மின்வாரியம் பொதுவெளியில் அறிவிப்பு வெளியிடாமல், 18 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும், குறுந்தொழில் முனைவோருக்கு பெரும் சுமை ஏற்படுத்தும் விதமாக, தானியங்கி முறையில், 'பவர்பேக்ட்' திட்டத்தை அறிமுகம் செய்து, கடும் அபராதத்தை விதித்து வருகிறது.
அபராதம் விதிக்க தானியங்கி முறையைப் பின்பற்றும் மின்வாரியம், 3 பி கட்டண விகிதத்தில் இருந்து 3ஏ1 கட்டண விகிதத்துக்கு, தானியங்கி முறையில் மாற்றித் தர முடியாது என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
இப்பிரச்னையில் முதல்வர், மின்துறை அமைச்சர் தலையிட்டு, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, கட்டண விகிதத்தை மாற்றித் தர வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

