/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு உளுந்து விதை 'கிட்' இருப்பு
/
பழங்குடியின மக்களுக்கு உளுந்து விதை 'கிட்' இருப்பு
பழங்குடியின மக்களுக்கு உளுந்து விதை 'கிட்' இருப்பு
பழங்குடியின மக்களுக்கு உளுந்து விதை 'கிட்' இருப்பு
ADDED : மே 01, 2025 11:33 PM
ஆனைமலை; ஆனைமலை வேளாண்துறை சார்பில், பழங்குடியின மக்களுக்கு வழங்க உளுந்து விதை 'கிட்' இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:
ஆனைமலை வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில், மக்களுக்கு வழங்குவதற்கு, 80 எண்கள் (4 கிலோ கிட்) உளுந்து 'கிட்' ஆனைமலை, கோட்டூர் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது.
கடந்த பிப்., மாதத்தில், 20 எண்கள் உளுந்து விதைகள்'கிட்' பழைய சர்க்கார்பதி வாழ் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், மலை கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்களை அரசின் பங்குதாரர்களாக இணைக்க வேளாண்துறை முன்னெடுத்துள்ளது.
வனப்பகுதி எல்லைகளில் வாழும் பழங்குடியின மக்கள், வன உரிமை பட்டா நகல் சமர்பித்து உளுந்து விதை, நான்கு கிலோ இலவசமாக பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு வேளாண் உதவி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

