/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவதார் பப்ளிக் பள்ளி 12வது ஆண்டு விழா
/
அவதார் பப்ளிக் பள்ளி 12வது ஆண்டு விழா
ADDED : ஜன 30, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;போத்தனுார், செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள அவதார் பப்ளிக் பள்ளியில்,12வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
சிறப்பு விருந்தினராக ரகுபதி ஐ.ஆர்.எஸ்., கலந்து கொண்டார். கல்வி, விளையாட்டு மற்றும் கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. பல்துறைகளில் சிறப்புடன் திகழ்ந்தமாணவர்களுக்கு, 'ஸ்டார் சைல்டு' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், பாட்டு, நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை, மாணவர்கள் அரங்கேற்றினர். பள்ளியின் தாளாளர் செந்தில்குமார், செயலாளர் அருள் பிரகாசம், முதல்வர் ரம்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.