தொழில்நுட்ப கல்வியில் அசத்தும் அவதார் பப்ளிக் பள்ளி
தொழில்நுட்ப கல்வியில் அசத்தும் அவதார் பப்ளிக் பள்ளி
ADDED : பிப் 28, 2026 05:34 AM
கற்றல், கற்பித்தலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதோடு, டிஜிட்டல் வகுப்பறையில் பாடம் நடத்துதல், விளையாட்டு, இணை செயல்பாடுகள் என, ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக அவதார் பப்ளிக் பள்ளி செயல்படுகிறது.
பள்ளி தாளாளர் செந்தில்குமார் கூறியதாவது: போத்தனுார்- செட்டிபாளையம், மயிலாடும்பாறையில் 14 ஆண்டுகளாக அவதார் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) செயல்படுகிறது. இங்கு, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன. டிஜிட்டல் வகுப்பறைகள் இருப்பதால், மாணவர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் விளக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெறுகிறோம். ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறனை மதிப்பாய்வு செய்து, அத்திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர். கல்வி சார்ந்த சந்தேகங்கள் உட னடியாக விளக்கம் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கல்வியில் மட்டுமல்லாமல், விளையாட்டு போட்டிகளில், சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில், எங்கள் பள்ளி மாணவafகள் பதக்கம் வென்று வருகின்றனர். அத்லெடிக் மட்டுமல்லாமல், குழு விளையாட்டு போட்டிகளுக்கும் பிரத்யேக பயிற்சியாளர்கள் கொண்டு மாணவர்களை வழிநடத்துகிறோம். யோகா, கராத்தே, நடனம், ஸ்கேட்டிங் என பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. கல்வி இணை செயல்பாடு களில் மாணவர்களின் தி றனை வெளிப் படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறோம். கோவையின் அனைத்து பகுதியில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு, 'ஜி.பி.எஸ்., டிராக்' வசதியுடன் கூடி ய வாகன வசதி உள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
