அவிநாசி வேட்பாளர் முருகன் பிரசாரம் துவக்குகிறார்
அவிநாசி வேட்பாளர் முருகன் பிரசாரம் துவக்குகிறார்
ADDED : ஏப் 05, 2026 11:01 PM
அன்னூர்: அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளரும், இணை அமைச்சருமான முருகன், அன்னூர் ஒன்றியத்தில் பிரசாரத்தை துவக்குகிறார்.
மதியம் 3:00 மணிக்கு, பழமையான சாலையூர் பழனியாண்டவர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பிரசாரத்தை துவக்குகிறார்.
இதையடுத்து வடவள்ளி ஊராட்சியில், பெரிய புத்தூர் பஸ் ஸ்டாப் மற்றும் ஜெ.ஜெ.நகர், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியில் எஸ்.குரும்பபாளையம், நல்லி செட்டிபாளையம், அச்சம் பாளையம் மற்றும் கெம்பநாயக்கன்பாளையத்தில் மாலையில் பிரசாரம் செய்கிறார்
கரியாம்பாளையம் ஊராட்சியில், கரியாம்பாளையம், கிருஷ்ண கவுண்டன் புதூர், எல்லப்பாளையம் ஆகிய இடங்களிலும், குப்பேபாளையம் ஊராட்சியில் ஆண்டிச்சிபாளையம் கார்த்தி நகரிலும், காட்டம்பட்டி ஊராட்சியில் காட்டம்பட்டி மைதானத்திலும், கணேசபுரம் பஸ் ஸ்டாப்பிலும் பிரசாரம் செய்கிறார்.
மதியம் 3:00 மணிக்கு துவங்கும் பிரசாரம், கணேசபுரம் பஸ் ஸ்டாப்பில் இரவு 9:00 மணிக்கு முடிகிறது. இதில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
