தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி நான்கு வழி சாலை அளவீடு பணிகள் துவக்கம்

அவிநாசி நான்கு வழி சாலை அளவீடு பணிகள் துவக்கம்

அவிநாசி நான்கு வழி சாலை அளவீடு பணிகள் துவக்கம்


ADDED : டிச 20, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, 38 கிலோமீட்டர் துாரம், இருவழிச்சாலையாக உள்ளது. அவிநாசி அன்னுார், மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் ஊட்டி செல்கின்றன.

இதனால் அன்னூர், மேட்டுப்பாளையம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், - அவிநாசி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தற்போது அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அவிநாசி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற, தமிழக அரசு, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையின் இருபக்கம் உள்ள, மரங்களை வெட்டி அகற்றி விட்டு, தேவையான இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களையும், நில ஆர்ஜிதம் செய்யப்படும். மேலும் தற்போதுள்ள ஏழு பாலங்களையும் அகலப்படுத்தப்படும். நான்கு வழிச்சாலையின் அகலம், 16.2 மீட்டர் ஆகும். இடையில் தடுப்புகள் வைக்கப்படும். எந்தெந்த இடத்தில் பொதுமக்களின் நிலத்தை எடுப்பது என்பது குறித்து, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அளவீடு செய்து வருகின்றனர்.

அனைத்து அளவீடு செய்து முடித்த பின், அரசுக்கு அனுப்பப்படும்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us