தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி ரோடு பஸ் ஸ்டாப்கள் மாறுகின்றன  போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை

அவிநாசி ரோடு பஸ் ஸ்டாப்கள் மாறுகின்றன  போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை

அவிநாசி ரோடு பஸ் ஸ்டாப்கள் மாறுகின்றன  போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை


ADDED : ஆக 28, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த வேலைக்காக சில பஸ் ஸ்டாப்களில் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

நீக்கிய ஸ்டாப்களில் மீண்டும் நிழற்குடை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2.64 கோடி வழங்கப்பட்டது. 9 புதிய நிழற்குடை அமைக்கவும், சேதமடைந்த நிழற்குடைகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இத்திட்டத்துக்கான ஆலோசகராக உள்ள நெடுஞ்சாலைத்துறையில் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் மனுநீதி கூறியதாவது:

பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி, கிருஷ்ணம்மாள் கல்லூரி எதிரே, பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ், கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு எதிரே, ஏர்போர்ட் அருகே புதிய நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் போதிய இடம் இருந்தும் நிழற்குடை இல்லை.

கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இருந்து வெளிவந்தவுடனே ஒரு பஸ் ஸ்டாப் உள்ளது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். அந்த நிறுத்தம், சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே மாற்றப்படும்.

மேம்பாலம் ஏறுதளம், இறங்குதளம் அருகே உள்ள ஸ்டாப்புகள் அருகே சற்று தள்ளி வைக்கப்படும். காந்திபுரத்தில் இருந்து வரும் பஸ்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் நீண்ட வரிசையில் நிற்பதாக புகார் உள்ளது.

அந்த பஸ் ஸ்டாப்பை 50 மீ., தள்ளி வைக்க திட்டம் உள்ளது. வரதராஜா மில் பஸ் ஸ்டாப்பும் போக்குவரத்துக்கு தகுந்த வகையில் மாற்றப்படும்.

இடவசதி உள்ள இடங்களில் பஸ் பே தனியாக மார்க் செய்து, உள்ளே சென்று நின்று போகும் வகையில் மாற்றப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us