ADDED : ஆக 28, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
கோவை: பள்ளிக்கல்வி துறை சார்பில் கிழக்கு குறுமைய போட்டி தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் நான்கு நாட்கள் நடந்தது.
பால் பேட்மின்டன் போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், ஜி.ராமசாமி நாயுடு பள்ளியின் மாணவர் மற்றும் மாணவியர் அணிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் முதலிடம் பிடித்தன. இரு பாலர் அணிகளும் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளன. இந்த அணிகள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
