ADDED : ஆக 28, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர ஏல விற்பனை நேற்று முன்தினம் நடந்தது; 16 ஆயிரத்து 920 தேங்காய்கள், தேங்காய் கொப்பரை 170 மூட்டைகள், தேங்காய் தொட்டி 25 மூட்டைகள், பருத்தி 128 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
தேங்காய் ஒரு கிலோ, பச்சை ரகம் 45 முதல் 49 ரூபாய் வரையும், கருப்பு ரகம் 50 முதல் 53 ரூபாய் வரையும், தேங்காய் கொப்பரை 125 முதல் 162 ரூபாய் வரையும், தேங்காய் தொட்டி 36 ரூபாய் வரையும் விற்பனையாயின.
தேங்காய் விலை கடந்த வாரத்தை விட குறைந்தது. மொத்தம் 22 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனையாயின; ஏலத்தில் 150 விவசாயிகள் பங்கேற்றனர் என, கோயம்புத்துார் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்தார்.
