/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் நினைவுச் சொற்பொழிவு
/
அவினாசிலிங்கம் நினைவுச் சொற்பொழிவு
ADDED : நவ 22, 2025 07:04 AM

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், நிறுவனர் அவினாசிலிங்கம் 34வது ஆண்டு நினைவுச்சொற்பொழிவு நடந்தது.அவினாசிலிங்கம் பல்கலையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், ''அவினாசிலிங்கம் அய்யா, மகளிர் கல்விக்காக பாடுபட்ட மாமனிதராவர். பெண்கள் முன்னேற்றம், ஆன்மிகம், தேசியம் போன்றவற்றை லட்சியமாகக் கொண்டவர். நன்னெறி கல்வியையும், பண்பாட்டுக் கல்வியையும் வழங்கும் பெட்டகமாக, அவினாசிலிங்கம் பல்கலை திகழ்வதற்கு அவரே காரணம்,'' என்றார்.
அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் அறங்காவலர் சோமசுந்தரம், துணை நிர்வாக அறங்காவலர் கவுரி, பல்கலை துணைவேந்தர்பாரதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

