தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மலைப்பாதையில் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும்'

 'மலைப்பாதையில் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும்'

 'மலைப்பாதையில் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும்'


ADDED : ஜன 17, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: -: மலைப்பாதையில் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும் என, சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு சங்கத்தினர், இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்புணர்வு சங்கத்தின் சார்பில், இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், கல்லாறு சோதனை சாவடி அருகே, மலைப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு, விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்கள் ஓட்டுனர்களுக்கு விதிமுறைகள் அடங்கிய விளம்பர நோட்டீஸும், சிறிய புத்தகமும் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு, நோட்டீஸ்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊட்டி தமிழக அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெய்சங்கர், உதவி மேலாளர் பாஸ்கர், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்புணர்வு சங்க கோவை மாவட்ட தலைவர் லெனின் சக்கரவர்த்தி, இமைகள் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சேர்மன் ஜார்ஜ், சோதனை சாவடி ஆய்வாளர் சுகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.அப்போது 'மலைப்பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பாதுகாப்புடன் கவனமாக வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us